மலாய் ரொட்டி
தேவையான பொருட்கள்:
மைதாமாவு - 2 கோப்பை
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
கெட்டியான பால் - 1/2 கோப்பை
முட்டை - 1
சர்க்கரை - 1 தேக்கரண்டி
ஆப்பச்சோடா - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 1/4 கோப்பை
உப்புத்தூள் - தேவையான அளவு
செய்முறை:
மைதா மாவில் உப்பு, சர்க்கரை, ஆப்பச்சோடா ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி, வெண்ணெயைப் போட்டு நன்கு பிசிறிக்கொள்ளவும்.
பிறகு பாலைச் சேர்த்து கலக்கவும். தொடர்ந்து தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து மிருதுவான உருண்டையாக பிசைந்து வைக்கவும்.
பிசைந்த உருண்டையை அரைமணி நேரம் ஊறவைத்து எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
தோசைக்கல்லை காயவைத்து உருட்டிய உருண்டைகளை சற்று தடிமனான ரொட்டியாக தேய்த்து கல்லில் போடவும். சற்று வெந்தவுடன் திருப்பிப் போட்டு சுற்றிலும் எண்ணெயை ஊற்றி இரண்டு புறமும் சிவக்க சுட்டெடுக்கவும்.
குறிப்புகள்:
மலாய் ரொட்டி அசைவ குழம்புகளுடன் தொட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.