மரவள்ளிக்கிழங்கு தோசை செய்முறை
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 1/4 கிலோ
பச்சை அரிசி - 1/4 கிலோ
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பெருங்காயம் - சிறிதளவு
ஜீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவயான அளவு
செய்முறை:
அரிசியை குறைந்தது 1 நேரம் ஊற வைக்கவும். மிக்சியில் ஊறின அரிசி,துருவிய மரவள்ளிக்கிழங்கு, பச்சைமிளகாய், இஞ்சி, ஜீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். ஒருபாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில்வத்து மாவை ஊற்றி கரண்டியால் வட்டமாகப்பரத்தி விடவும்.
நன்கு சிவந்து மொறு, மொறுப்பானதும் தட்டில் போட்டு சூடாகப் பரிமாறவும்.