மரவள்ளிக்கிழங்கு இடியாப்பம்
3 - Ok!
2 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
சீனி - 1கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
ஏலக்காய் (பொடிக்கவும்) - 2
செய்முறை:
மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி , சிப்ஸ் கட்டையில் துருவிக் கொள்ளவும்(இடியாப்பம் போல் மெலிதாக நீளவாக்கில் வரும்படி)
ஒரு இட்லி பாத்திரத்தில், இட்லி தட்டில் மரவள்ளிக்கிழங்கை பரப்பி 10 நிமிடம் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த மரவள்ளிக்கிழங்குடன் சீனி,தேங்காய்,ஏலப்பொடி சேர்த்துக் கிண்டவும்