மசூர் தால் கிச்சடி
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 1
மசூர் பருப்பு (முளைகட்டியது) - 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
காரட் - 2
பீன்ஸ் - 10
உருளை - 1
பச்சை பட்டாணி - 3 மேசைக்கரண்டி
சோளம் - 3 மேசைக்கரண்டி
பட்டை, ஏலம், கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை - தாளிக்க
புதினா - ஒரு பிடி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மசூர் பருப்பை உடையாமல் இரண்டு விசில் கொடுத்து வேக வைக்கவும்.
அரிசியை வெறும் வாணலியில் தண்ணீர் இல்லாமல் வறுத்து வைக்கவும்.
நெய் காய்ந்ததும் சிறிது புதினா மற்றும் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
வெங்காயம், மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்பு காய்கறிகள் மற்றும் பருப்பு சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு உப்பு, தண்ணீர், கரம் மசாலா சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதி வந்ததும், அரிசி, புதினா சேர்த்து வேக வைத்து இறக்கவும்.