மசாலா ரொட்டி
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
மல்லி இழை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளக்காய், மல்லி இழை, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, எண்ணெய் ஒரு தேக்கரண்டி போட்டு பிசைந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
தோசைக்கல்லை சூடாக்கி சப்பாத்தியை போட்டு வேகவைத்து எடுக்கவும்.