மசாலா பூரி (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

குழம்பிற்கு:

ஊறவைத்த வெள்ளை பட்டாணி - 1 கப்

உருளைக்கிழங்கு - 1

கிராம்பு பொடி - 1/4 தேக்கரண்டிக்கும் குறைந்த அளவு

பட்டை பொடி - 1/4 தேக்கரண்டிக்கும் குறைந்த அளவு

ஜாதிப்பத்திரி பொடி - 1/4 தேக்கரண்டிக்கும் குறைந்த அளவு

மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கார்ன் ஃப்ளார் மாவு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

புதினா - 5 இலை

பூரி செய்வதற்கு:

மைதா மாவு - 3 தேக்கரண்டி

ரவை - 2 கப்

உப்பு - தேவையான அளவு

சூரியகாந்தி எண்ணை - பூரி பொரிக்க தேவையான அளவு

அலங்கரிக்கவும், சுவைக்காகவும்:

துருவிய கேரட் - 1

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

பொடியாக நறுக்கிய தக்காளி - 1/4 பாகம்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - 1/4 கப்

செய்முறை:

ஊறவைத்த வெள்ளை பட்டாணியும், உருளைக்கிழங்கையும் சிறிது உப்பும், ஒரு கப் தண்ணீரும் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். 4 விசில் போதுமானது.

பிறகு வேகவைத்த பட்டாணி, உருளைக்கிழங்கை ஒரு கரண்டியால் மசித்து விடவும்.

பிறகு கிராம்பு, பட்டை, ஜாதிப்பத்திரி, மிளகாய் தூள், மஞ்சள் தூள்களை சேர்த்து குழம்பினை அடுப்பில் வைத்து மீண்டும் சூடாக்கவும்.

கார்ன்ஃப்ளார் மாவை 1/4 கப் தண்ணீருடன் கரைத்து குழம்பில் ஊற்றி கிளறவும். குழம்பு கெட்டியாகத் தொடங்கும்.

குழம்பு கொதித்ததும் தீயை அணைத்துவிட்டு புதினா மற்றும் கறிவேப்பிலையை போட்டு கிளறி குழம்பை மூடி வைக்கவும்.

பூரிக்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து ஒரு கையளவு உருண்டைகளாக உருட்டவும்.

பிறகு அதனை சப்பாத்தி போல் பலகையில் பெரியதாக பரப்பி ஒரு சின்ன க்ளாஸ் கொண்டோ இல்லை ஒரு மூடி கொண்டோ மாவின் மேல் அழுத்தி வட்ட வட்டமாக எடுத்து எண்ணெயில் போட்டு பூரியாக பொரிக்கவும்.

நீண்ட நேரம் கழித்து பரிமாறுவதானால் பொரித்த பூரிகளை சூடாறியவுடன் காற்று புகாதவாறு ஒரு பாத்திரத்தில் போட்டு அடைக்கவும்.

பரிமாறும்பொழுது தட்டில் முதலில் 8 பூரிகளை வைத்து மேலே சூடான பட்டாணி குழம்பை ஊற்றி, அதன் மேல் நறுக்கி வைத்துள்ள கேரட், வெங்காயம், மல்லி இலை, தக்காளி தூவி உடனே பரிமாறவும்.

குறிப்புகள்: