மசாலா பூரி (1)
3 - Ok!
2 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
மைதா - 1 டம்ளர்
கோதுமை - 1 டம்ளர்
பட்டர் - 2 மேசைக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பூரி பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மசாலாவிற்கு:
கருப்பு எள் - 1 1/2 தேக்கரண்டி
வெள்ளை எள் - 1 1/2 தேக்கரண்டி
ஓமம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள மசாலாவை லேசாக வறுத்து கொள்ள வேண்டும்.
பிறகு மைதா, கோதுமையை கலந்து அதில் உப்பு, தயிர், பட்டர் உருக்கி போட்டு மிளகாய் தூளும் சேர்த்து வறுத்து வைத்துள்ளதையும் போட்டு நல்ல பிசறி தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக பசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு பூரிகளாக பொரித்தெடுக்கவும்.