மசாலா புட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வறுத்த அரிசி மாவு - 1 1/2 கப்

வறுத்த கோதுமை மாவு - 1 1/2 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

பெரிய கேரட் - 1

பெரிய உருளைக்கிழங்கு - 1

பீன்ஸ் - 1

முட்டை - 1

வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிதளவு

பட்டர் - 1 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி மற்றும் கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீர் தெளித்து பிசறி தேங்காய் துருவல் சேர்த்து உதிரியாக கலந்து கொள்ளவும்.

பிறகு மாவை புட்டுக் குழல் (அல்லது) இட்லிப் பானையில் வேக வைத்து உதிர்த்து வைக்கவும்.

கேரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதங்கியதும், தக்காளி சேர்த்து குழைய வதக்கி தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

தூள் வகைகளின் பச்சை வாசனை போனதும் முட்டையை உடைத்து ஊற்றி வேகவிடவும்.

முட்டை அரை பதம் வெந்ததும், வேக வைத்த காய்கறிகள் மற்றும் பட்டர் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.

அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் வேக வைத்த புட்டைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: