மசாலா இட்லி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1/2 படி

உளுந்து - 1 ஆழாக்கு

கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

கடுகு - 2 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - 2 துண்டு

இஞ்சி - 2 துண்டு

முந்திரிப் பருப்பு - 20

பச்சை மிளகாய் - 4

கறிவேப்பிலை - சிறிது

தேங்காய் - சிறிது

உப்பு - 4 தேக்கரண்டி

நெய் - 4 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியையும், உளுந்தையும் எடுத்து நீரில் ஊறவைத்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எடுத்துக் கல்லுரலில் போட்டு ஆட்டவும். நீர் விட வேண்டாம்.

மாவாக அரைத்து அதில் உப்பையும், பெருங்காயத்தையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.

சுமார் எட்டு அல்லது பத்து மணிநேரத்திற்கு பிறகு தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொண்டு அடுப்பில் வாணலியை வைத்து அதில் நெய் ஊற்றி கடுகை போடவும்.

கடுகு வெடித்ததும் கொஞ்சம் உளுந்தையும், கடலைப் பருப்பையும் போட்டுப் பொன்னிறமாக வறுத்துக் கொண்டு தேங்காய் பச்சை மிளகாய், முந்திரிப் பருப்பு, இஞ்சி முதலானவற்றைப் பொடியாக்கிப் போடவும்.

பிறகு மிளகையும், சீரகத்தையும் போட்டு எல்லாவற்றையும் வதக்கியெடுத்து மாவுடன் சேர்க்கவும். நன்றாகக் கலக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.

சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு அதையெடுத்து, இட்லி பானையை அடுப்பில் வைத்து அதில் மாவை ஊற்றி நன்றாக வேகவிடவும்.

குறிப்புகள்: