மசாலா இடியாப்பம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 200 கிராம்

வெங்காயம் - 1

தக்காளி - 1

தேங்காய் - அரை மூடி

புதினா இலை - சிறிதளவு

பட்டை - சிறிதளவு

கிராம்பு - சிறிதளவு

ஏலக்காய் - சிறிதளவு

பிரிஞ்சி இலை - சிறிதளவு

முந்திரிப்பருப்பு - 10

பச்சைமிளகாய் - 4

இஞ்சி - சிறியதுண்டு

பூண்டு - 3 அல்லது 4

எலுமிச்சைபழம் - அரை மூடி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பச்சரிசியை களைந்து, நன்றாக தண்ணீரை வடித்து, சற்று நேரம் உலர்த்தி மிக்ஸியில் இட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அந்த மாவினை கட்டியில்லாமல் சலித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் வைத்து அதில் உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக கொதித்ததும் மாவை கொட்டி கிளற வேண்டும்.

பிறகு மாவினை அச்சில் போட்டு இடியாப்பமாக பிழிந்து, ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, புதினா இலை தாளித்து பிறகு வெங்காயத்தை வதக்கவும்.

வெங்காயம் வதங்கி பொன்னிறம் ஆனதும் தக்காளி போட்டு வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு கலவையை போட்டு வதக்கவும்.

தேங்காயைப் பாலினை எடுத்து அதில் ஊற்றவும். பால் சேர்ந்து சற்று கெட்டியானதும் இடியாப்பத்தை சேர்த்து கிளறவும்.

இறுதியில் எலுமிச்சை பழச்சாறு ஊற்றவும்.

குறிப்புகள்: