மசாலா இடியாப்பம் (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இடியாப்பம் - 4

முட்டை - 2

கடுகு, உளுந்து - 1/2 தேக்கரண்டி

சீரகம் - சிறிதளவு

கறிவேப்பிலை - அரை கொத்து

பச்சை மிளகாய் - 1

வெங்காயம் - 2

தக்காளி - 1

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இடியாப்பம் உதிர்த்து வைக்கவும்

எண்ணெயில் கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும்

பின் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதில் முட்டையை உடைத்தூற்றி நன்கு வதக்கவும்.

பின்னர் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்

நன்கு தக்காளி குழைந்ததும் இடியாப்பம் சேர்த்து கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்: