மசாலா இடியாப்பம்

on on on off off 5 - Good!
3 நட்சத்திரங்கள் - 5 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வேகவைத்த இடியாப்பம் - 4

வெங்காயம் - 2

தக்காளி - 1

முட்டை - 2

பச்சை மிளகாய் - 1

கரம் மசாலா தூள், தனி மிளகாய் தூள் - தலா 1/2 தேக்கரண்டி

முந்திரி - 6

தாளிக்க:

கடுகு, உளுந்து - 1 தேக்கரண்டி

பட்டை, லவங்கம் - 2

எண்ணெய் - 4 தேக்கரண்டி

செய்முறை:

வேகவைத்த இடியாப்பத்தை உதிர்த்துக் கொள்ளவும்.

கடாயில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, முந்திரி, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.

முட்டை அரைபதமாக வெந்ததும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும், உப்பு, கரம் மசாலா தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தைச் சேர்த்து பிரட்டவும்.

இடியாப்பத்துடன் மசாலா நன்றாக சேர்ந்து வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: