மங்களுர் தோசை
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 ஆழாக்கு
தேங்காய் - ஒரு மூடி
கடலை மாவு - 3 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, தேங்காயை பூவாக துருவி அரிசியுடன் அரைக்கவும்.
மாவு அரைத்த பிறகு ஆட்டுகல் கழுவிய தண்ணீரை கொதிக்கவிடவும். கொதித்து கஞ்சி போல் வரும் போது இறக்கி மாவில் ஊற்றவும்.
கடலை மாவை தண்ணீரில் கரைத்து மாவில் ஊற்றி உப்பு சேர்த்து கரைக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து நெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றி முறுகல் போல் வந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.