ப்ளைன் உப்புமா
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
வெங்காயம் (பெரியது) - 1
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
மல்லி, கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ரவையை நன்கு மணம் வருமாறு வறுத்துக்கொள்ளவும். வெங்காயம், மல்லி இலை, இஞ்சி, பூண்டு கட் செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை வெடித்தவுடன், பொடியாக கட் செய்த இஞ்சி,பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து மூன்று அளவு தண்ணீர் வைத்து, மல்லி இலை தூவி கொதிக்க வைக்கவும்.
கொதித்த பின்பு சிம்மில் வைத்து வறுத்த ரவையை மெதுவாக கட்டி பிடிக்காமல் கிளறவும். பதம் வந்தவுடன் இறக்கவும்.