ப்ரெட் அடை
0
தேவையான பொருட்கள்:
பிரெட் துண்டுகள் - 10
இட்லி அரிசி - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 2
தக்காளி - 1
வெங்காயம் - 1
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இட்லி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கழுவி கொள்ளவும்.
அதனுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பிரெட் சேர்த்து அரைக்கவும்.
இதில் உப்பு சேர்த்துக் கலந்து, அடை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை காய வைத்து, அதில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.