ப்ரவுன் ரைஸ் பொங்கல்
தேவையான பொருட்கள்:
ப்ரவுன் ரைஸ் - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி (நறுக்கவும்) - சிறு துண்டு
முந்திரி - சிறிதளவு
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, நெய் - தாளிக்க
உப்பு - சிறிதளவு
செய்முறை:
ப்ரவுன் ரைஸ் மற்றும் பயத்தம் பருப்பை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் ப்ரவுன் ரைஸ், உப்பு, பெருங்காயம், பயத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
பேனில் நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி சேர்த்து பொரித்து சேர்க்கவும்.
லேசாக நெய் விட்டு கிளறி பரிமாறவும்.
குறிப்புகள்:
தேங்காய் சட்னி, கொத்சு, சாம்பார் ஆகியவை தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
சூடாக சாப்பிடுவது நல்லது இல்லையென்றால் விரைத்து கொள்ளும்