பொங்கல் கட்லட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1 கப்

துவரம் பருப்பு - 1/2 கப்

வெங்காயம் - 1 கப்

பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 5

கொத்தமல்லி தழை - 1/2 கப்

எண்ணெய் - 200 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கடலைப்பருப்பு அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஊறிய பருப்பை மிக்ஸியில் போட்டு அத்துடன் மிளகாய்வற்றல், கொத்தமல்லி தழையில் பாதி போட்டு உப்பு சேர்த்து நறநற வென்று அரைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தின் உள்புறத்தில் எண்ணெய் விட்டு தடவி அதில் அரைத்த கலவையை போட்டு அத்துடன் வெங்காயம், பெருஞ்சீரகம் போட்டு கலக்கவும்.

இந்த கலவையை அடுப்பில் 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

வேக வைத்த கலவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றால் போல் கட் செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடு வந்தவுடன் கட் செய்து கலவையை போட்டு பொறித்து எடுக்கவும்.

பொறித்த கட்லட் மீது மீதம் உள்ள கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிக்கவும்.

குறிப்புகள்:

இதற்கு இனிப்பு சட்னி தொட்டும் சாப்பிடலாம்.