பூண்டு தோசை
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 1 கப்
பூண்டு - 25 பல்
இட்லி மிளகாய் பொடி - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் அல்லது தோசைக்கல்லில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டை போட்டு வதக்கவும்.
பூண்டை 2 நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கி விட்டு ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி அளவு தோசை மாவை எடுத்து ஊற்றி தோசை வார்க்கவும்.
மேலே இட்லி மிளகாய் பொடி தூவி அதன் மேல் வதக்கி வைத்திருக்கும் பூண்டை தூவவும். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். தோசை கரண்டியை வைத்து ஒரு முறை தோசையின் மீது அழுத்தி விடவும். திருப்பி போடும் போது பூண்டு கீழே விழாமல் இருக்கும்.
தோசை வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும்.
குறிப்புகள்:
தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.