புளி உப்புமா (1)
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி நொய் - 1 ஆ
புளி - எலுமிச்சையளவு
கடுகு - சிறிது
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
எண்ணை - 2 அல்லது 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளியைக்கரைத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை விடவும்.
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்த புளி, உப்பு, மஞ்சள் பொடி போட்டு கொதிக்க விடவும்.
புளி வாசனை போனதும் அரிசி நொய்யைப் போட்டுக் கிளறவும். நொய் வெந்ததும் இறக்கி வைத்து சுடச்சுடப் பரிமாறவும்.