புதினா பரோட்டா (1)
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
புதினா - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவுடன் பொடியாக நறுக்கிய புதினா இலை, உப்பு சேர்த்து தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
இதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்றாக அடித்து பிசைந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் பெரிய உருண்டைகளாக எடுத்து திரட்டி இரண்டு பக்கமும் எண்ணெய் தேய்த்து புடவை மடிப்பு போல் மடித்து 15 நிமிடம் வைக்கவும்.
இதை மீண்டும் தேய்த்து தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் ஒரு முறை திருப்பி போட்ட பின் தேக்கரண்டி கொண்டு நெய் தேய்த்து இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும்.
3 அல்லது 4 பரோட்டா செய்ததும் இரண்டு கைகளுக்கும் நடுவே வைத்து அடித்து விடவும்.