பீஸ் மசாலா இட்லி

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 1 கப்

தக்காளி - பொடியாக நறுக்கியது ஒன்று

சின்ன வெங்காயம் - 4

பச்சை பட்டாணி - 1/2 கப் (ரெண்டு மூன்றாக நறுக்கவும்)

உளுந்து - தாளிக்க

கொத்தமல்லி தழை - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் - சிறிதளவு

மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - விருப்பபட்டால் சேர்க்கவும்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிறிது நேரம் கழித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமாக மாறியதும், தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.

நன்கு வதங்கிய பின் அரைத்து வைத்துள்ள கலவையை இதில் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் பட்டாணியை சேர்க்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்.

பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி வைத்து ஆற விடவும்.

ஆறிய பின்னர் இட்லி மாவில் சேர்த்து ஊற்றவும். 10 - 15 நிமிடம் கழித்து தக்காளி சட்னி உடன் சூடாக பரிமாறலாம்.

குறிப்புகள்: