பீன்ஸ் கோதுமை அடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீன்ஸ் - 100 கிராம்

வெங்காயம் - ஒன்று

வெங்காயத்தாள் - ஒன்று

கோதுமை மாவு - ஒரு கப்

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு ஏற்ப

உளுந்து - 3 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 3 தேக்கரண்டி

எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

தோசை அல்லது இட்லி மாவு - ஒரு கரண்டி

செய்முறை:

முதலில் பீன்ஸை பொடியாக நறுக்கி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். வெங்காயம், வெங்காயத்தாள் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.

தோசைகல்லில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுந்து, சேர்த்து வதக்கவும்.

பருப்புகள் பொன்நிறமானதும் அதனுடன் வெங்காயம், வெங்காயத்தாள் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

பின்பு வதக்கிய பொருள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, தோசைமாவு ஆகியவற்றை கோதுமை மாவுடன் சேர்த்து கலக்கவும்.

அவற்றில் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும் தீயை சிம்மில் வைத்து அடை போல் ஊற்றி நன்கு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

தேவையெனில் அடையில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி எடுக்கவும். இப்போது சுவையான, ஆரோக்கியமான பீன்ஸ் கோதுமை அடை தயார்.

குறிப்புகள்: