பிரெட் புட்டு
தேவையான பொருட்கள்:
பிரெட் - 12
முந்திரி - 10
திராட்சை - 15
ஏலக்காய் - 2
சீனி - கால் கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். முந்திரியை இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பிரெட்டின் ஓரத்தில் உள்ள பகுதியை வெட்டி எடுத்து விடவும். பிரட்டை சிறு சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு பொலபொலவென்று பொடித்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி மற்றும் திராட்சையை போட்டு ஒரு நிமிடம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
அதனுடன் பொடி செய்து வைத்திருக்கும் பிரட்டை போட்டு ஒன்றாக கிளறி விடவும்.
அதன் பின்னர் பிரெட்டுடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பிறகு சீனியை போட்டு ஒரு முறை நன்கு கிளறி விட்டு உடனே இறக்கி விடவும். விருப்பட்டால் இறக்கும் பொழுது மேலும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி இறக்கலாம். சீனி கரையும் முன் இறக்கி விட வேண்டும்.