பிஞ்சு சோள தோசை
0
தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி-1 கப்
பச்சரிசி- 1/2 கப்
பிஞ்சு சோளத்திலிருந்து உதிர்த்த முத்துக்கள் - 3/4 கப்
உளுத்தம்பருப்பு - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி வகைகளையும் உளுத்தம்பருப்பையும் 6 - 8 மணி நேரம் போதுமான நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
அரைக்க ஆரம்பிக்கும்போது முதலில் சோள முத்துக்களைப்போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு அனைத்தும் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்தில் அரைத்தெடுக்கவும்.
உப்பு சேர்த்துக் கரைத்து 8 மணி நேரம் பொங்க விடவும். மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும்.