பால் நூடுல்ஸ்

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பால் - 1 லிட்டர்

சர்க்கரை அல்லது வெல்லம் - 1/4 கிலோ

புழுங்கல் அரிசி - 1/4 கிலோ

தேங்காய் - 1

ஏலக்காய் - 4

பச்சைக்கற்பூரம் - 2 துண்டு

ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்

குங்குமப் பூ - சிறிது

செய்முறை:

புழுங்கல் அரிசியை சுமார் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தேங்காயை நைசாக துருவிக்கொள்ளவும்.

ஊறிய அரிசியை தேங்காய்த் துருவலுடன் மிக்ஸி அல்லது ஆட்டுக்கல்லில் நைசாக அரைக்கவும்.

அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்க வேண்டும்.

அரைத்த மாவை தேன் குழல் அச்சில் போட்டு ஒரு வெள்ளைத் துணியில் நீள வாக்கில் பிழிய வேண்டும்.

நன்கு உலர்ந்ததும் பிழிந்து நூடுல்ஸை சிறுசிறு துண்டுகளாக்கி இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும்.

பாலை தண்ணீர் சேர்க்காமல் சுண்டக் காய்ச்சி (அரை லிட்டர் ஆகும் வரை) பின் சர்க்கரை போட்டு கரைந்ததும், பச்சைகற்பூரம், ஏலப்பொடி, குங்குமப்பூ சேர்க்கவும்.

பிறகு கல்லில் வேக வைத்த நூடுல்ஸ்சை பாலில் போடவும்.

குறிப்புகள்:

இதை சூடாகவோ அல்லது குளிரவைத்தோ சாப்பிடலாம்.