பால் இட்லி
தேவையான பொருட்கள்:
புளிக்காத இட்லி மாவு - தேவையான அளவு
காராமணி - 1 கப்
முழுப்பயறு - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
வெல்லப்பொடி - 2 கப்
பால் - 3 அல்லது 4 லிட்டர்
ஏலப்பொடி - 2 தேக்கரண்டி
செய்முறை:
காராமணியையும் பயிறையும் நிறைய தண்ணீரில் முதல் நாள் இரவே ஊற வைத்துவிடவும்.
காலையில் தண்ணீரை இறுத்தி, வேறு தண்ணீரில் இரண்டு பயிறையும் குக்கரில் வேகவைக்கவும்.
பிறகு இவை இரண்டையும் ஒரு கப் வெல்லம், நெய், தேங்காய்த்துருவலுடன் சேர்த்து ஒரு வாணலியில் போட்டுக் கிளறி பூரணம் கெட்டியானதும் ஒரு தேக்கரண்டி ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இட்லித்தட்டில் இட்லி மாவை ஒவ்வொரு குழியிலும் பாதி ஊற்றி, பிறகு பூரணத்தை அதன்மீது வைத்து மறுபடியும் இட்லி மாவால் அதை மூடவும்.
இதைப் போல் எல்லா இட்லிகளையும் தயாரித்து வழக்கம்போல் ஆவியில் வேக விடவும்.
பாலை பாக்கி வெல்லப்பொடி, ஏலப்பொடி சேர்த்து அது பாதியாக கெட்டியாகும் அளவு காய்ச்சவும்.
ஒரு கிண்ணத்தில் ஒரு இட்லி வைத்து அதன் மேலே பாலை அந்த இட்லி மூழ்கும் வரை ஊற்றி பரிமாறவும்.