பானி பூரி (1)
0
தேவையான பொருட்கள்:
உப்பிய சின்ன பூரி - 6 அல்லது தேவையான அளவு
பானிக்கு:
புதினா - 1/2 கட்டு,
கொத்தமல்லி தழை - 1/2 கட்டு,
பச்சை மிளகாய் - 2,
வெல்லத்தூள் - 1 தேக்கரண்டி,
எழுமிச்சம் பழச்சாறு - 1 பழ அளவு,
பேரிச்சம் பழம் - 4,
உப்பு - தேவையான அளவு.
உள்ளே நிரப்ப:
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2,
வேக வைத்த முளைப்பயிறு - 2 கைப்பிடி,
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
உருளைக்கிழங்கை உதிர்த்து, மீதி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
பானிக்குக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாக அரைத்து தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
பானி பூரி செய்யும் முறை:
ஏற்கனவே செய்து வைத்துள்ள பூரிகளில் உப்பியவற்றை எடுத்து, நடுவில் துளையிட்டு, உருளைக்கிழங்கு கலவையை உள்ளே நிரப்பி, பானியை உள்ளே ஊற்றி, உடனே சாப்பிட வேண்டும்.