பாசிப்பருப்பு பூரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா – 1/4 கிலோ

பாசிப்பருப்பு – 50 கிராம்

வெங்காயம் – 1

மிளகாய் பொடி – 1/2 தேக்கரண்டி

சீரகம் – 1/4 தேக்கரண்டி

எண்ணை - பூரி பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாசிப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும்.

வெங்காயத்தை சன்னமாக அரியவும்.

பருப்பு நன்றாக அரைப்பட்டதும் நறுக்கிய வெங்காயம், மிளகாய் பொடி, சீரகம், உப்பு சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் அரைத்து எடுக்கவும்.

மாவை சலித்து அரைத்தவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து (முடிந்த அளவு குறைவான தண்ணீர் உபயோகித்து) பிசையவும்.

மாவு மெதுவாகி ஒட்டாமல் வரும் வரை (குறைந்தது பத்து நிமிடம்) கைகளினால் பிசையவும்.

பிறகு சற்று தடிமனான சிறிய அப்பளங்களாக இடவும். எண்ணெயை நன்கு சூடாக்கி அப்பளங்களை போட்டு பூரியாக பொரித்து எடுக்கவும்

குறிப்புகள்: