பாசிப்பயறு இட்லி (1)
0
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு- 1 கப்
உளுந்து - 1 கப்
ரவா - 1 கப்
பொடியாகத் துருவிய இஞ்சி - 1 மேசைக்கரண்டி
பொடியாகத்துருவிய பச்சைமிளகாய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பையும் உளுந்தையும் போதுமான நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
காலையில் இந்த இரண்டையும் தண்ணீர் தெளித்து தெளித்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
போதுமான உப்பு சேர்த்துக் கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
ஒரு கப் ரவா, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்துக் கலந்து இட்லி சுடவும்.