பலாப்பழ பொங்கல்
0
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய பலாப்பழ சுளைகள் - 15
பச்சரிசி - 1/4 கிலோ
சர்க்கரை - 150 கிராம்
நெய் - 100 கிராம்
முந்திரி - 5
கிராம்பு - 2
ஏலக்காய் -2
செய்முறை:
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
அரிசியை 2 மடங்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
பாதி அரிசி வெந்ததும், பலாச் சுளைகள், முந்திரி, சர்க்கரை, நெய் சேர்த்து கிளறவும்.
ஏலக்காயையும், கிராம்பையும் பொடித்து போடவும். அரிசி நன்கு வெந்ததும் இறக்கவும்.