பருப்பு அடை
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 1 1/2 கப்
உளுந்து - 1 கப்
பச்சை பயிறு - 1 கப்
துவரம் பருப்பு - 1 கப்
கடலை பருப்பு - 1 கப்
கொள்ளு பருப்பு - 1 கப்
பச்சை மிளகாய் - 7
பெரிய வெங்காயம் - 3
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணை - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசி, பருப்பு எல்லாவற்றையும் இரண்டு மணி நேரம் நன்றாக ஊறவைத்து, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
அரைத்த எடுத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் கலந்து தோசைக்கல்லில் அடையை நன்றாக நல்லெண்ணை விட்டு வார்க்கவும்.
இதை பச்சையாக அரைத்த காரமான மல்லி சட்னியுடன் சூடாக பரிமாறவும்.