பருப்பு தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 3 கப்

துவரம்ப்பருப்பு - 1/2 கப்

கடலைப்பருப்பு - 1/2 கப்

ஒன்றும் ரெண்டுமாக பொடித்த குறுமிளகு - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி மற்றும் பருப்பை தனி தனியாக கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது உப்பு சேர்த்து கலந்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒன்னரை மணி நேரம் ஊற விடவும்.

இந்த கலவை தோசை மாவு பதத்தை விட கொஞ்சம் கட்டியமாக இருக்க வேண்டும்.

சீரகம், பச்சை மிளகாய், மிளகு, தேங்காய் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும். ஊத்தாப்பம் போல் வார்த்தெடுக்கவும்.

குறிப்புகள்: