பருப்பு அரிசி ரவா உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி

பயத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி

துவரம்பருப்பு - 3 மேசைக்கரண்டி

வற்றல் மிளகாய் - 3

பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

தேங்காய்த்துருவல் - 1 கப்

கறிவேப்பிலை - 20 இலைகள்

அரிசி ரவா - 1 கப்

பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2 தேக்கரண்டி

பொடியாக அரிந்த வெங்காயம் - 1 கப்

பொடியாக அரிந்த தக்காளி - 1/2 கப்

பொடியாக அரிந்த கொத்தமல்லி - 1/2 கப்

கடுகு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 5 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பருப்புகளை போதுமான நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடிக்கட்டவும்.

சிறிது உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

இதை ஆவியில் வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவலையும் கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் அத்துடன் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

கடுகைப்போட்டு அது வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.

அதன் பிறகு தக்காளி, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

3 தம்ளர் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

தேவையான உப்பு சேர்க்கவும்.

கொதி வந்ததும் அரிசி ரவாவைப்போட்டு, குறைந்த தீயில் மூடி வைத்து சமைக்கவும். ரவா உதிர் உதிராக வெந்ததும் பருப்பு உசிலியை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

குறிப்புகள்: