பரங்கிக்காய் ராகி தோசை
0
தேவையான பொருட்கள்:
பரங்கிக்காய் - 1 கப்
ராகி மாவு - 2 கப்
தேங்காய் துருவல் - 1/2 மூடி
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பரங்கிக்காய் எல்லாவற்றையும் நைசாக அரைக்கவும். அரைத்ததை ராகி மாவு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கி சேர்த்து சற்று கனமாக தோசையாக ஊற்றவும்.