பயறு தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சைப் பயறு - 1/4 கிலோ

பச்சை மிளகாய் - 5

இஞ்சி - சிறு துண்டு

சீரகம் - 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - ஒரு மூடி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். பச்சைப் பயிறை 1 மணி நேரம் ஊற வைக்கவும்

ஊறிய பச்சைப் பயறுடன், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பயறு மாவுடன் தேங்காய் துருவலைச் சேர்த்து கலந்து, தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

குறிப்புகள்:

விரும்பினால் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லித் தழை, பெருங்காயப் பவுடர் சேர்க்கலாம்

தேங்காய் சட்னி, வெங்காய சட்னியுடன் பரிமாறவும்.