பயத்தம்பருப்பு புட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பயத்தம்பருப்பு - 1 கப்

நெய் - 1/4 கப்

முந்திரிப்பருப்பு - 10

தேங்காய்த்துருவல் - 2 கை

வெல்லப்பொடி - 3/4 கப்

ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

பயத்தம்பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் தண்ணீரை வடித்து, கொரகொரப்பாக ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்கவும்.

ஒரு நெய் தடவிய தட்டில் அதை பரவலாக பரத்தி 10 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும்.

ஆறிய பிறகு நன்கு உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை கெட்டிப்பாகு காய்ச்சவும்.

ஒரு சொட்டு வெல்லப்பாகை தண்ணீரில் போட்டால் அதை மெழுகு போல உருட்டும் பதம் இருக்கவேண்டும். அதுவே சரியான பதம்.

ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்புகளைப் போட்டு பொன்னிறத்துக்கு வறுத்தெடுக்கவும்.

பிறகு வெந்த பயத்தம்பருப்பை சேர்த்து அது நன்கு உதிருதிராக வரும்வரை குறைந்த தீயில் அதை வறுக்கவும்.

பிறகு தேங்காய்த்துருவலைச் சேர்த்து மறுபடியும் சிறிது நேரம் கிளறவும்.

ஏலப்பொடியையும் பாகையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: