பனீர் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 2 கப்

பனீர் - 200 கிராம்

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 3

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

க்ரீம் - 50 கிராம்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பனீரை துருவவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெயை விட்டு காய்ந்தவுடன், வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும். மிளகாய் தூள் வாசனை போனதும், பனீர் சேர்த்து கிளறவும். கடைசியாக க்ரீமை சேர்த்து கிளறி இறக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, தோசை ஊற்றி, மூடி வைத்து, வெந்ததும் உள்ளே பனீர் மசாலா வைத்து மடித்து, சாம்பார், சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: