பட்டாணி தேங்காய் ரொட்டி மசால்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முழு ரொட்டி - 2

பச்சைப் பட்டாணி - 400 கிராம்

தேங்காய் - 1

மிளகாய்ப் பொடி - 1 1/2 தேக்கரண்டி

மசாலாத் தூள் - 1 1/2 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் - 400 மில்லி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முழுரொட்டிகள் இரண்டையும் எடுத்துச் சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

தேங்காயை உடைத்துத் துருவிக் கொண்டு அத்துருவலையும் மசாலாத் தூளையும் ரொட்டித் துண்டுகளுடன் சேர்த்துக் கல்லுரலில் போட்டு இரண்டே முறை ஆட்டியெடுத்துக் கொள்ளவும்.

பச்சைப் பட்டாணியை ஒரு பாத்திரத்தில் போட்டுத் தேவையான அளவு உப்புப் போட்டு வேகவைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிப் பட்டாணியைப் போட்டுத் தாளித்துக் கொண்டு வதக்கவும்.

சில நிமிடங்களுக்குப் பிறகு ரொட்டித் துண்டுகளையும். மிளகாய்த் தூளையும் பட்டாணியுடன் போட்டு மேலும் வதக்கவும்.

கடைசியாகக் கொத்துமல்லியை அரிந்துபோட்டுக் கிளறிவிட்டு வாணலியை கீழே இறக்கி விடவும்.

குறிப்புகள்: