பச்சரிசி தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 4 கப்

வெந்தயம் - 1 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை வெந்தயத்துடன் சேர்த்து ஊற வைத்து வடித்து விட்டு உதிரி மாவாக அரைக்கவும். அரைத்த மாவில் வரும் நொய்யை தனியாக வைக்கவும்.

நொய் ஒரு கப் அளவு வைத்துக் கொண்டு மீதம் உள்ள நொய்யை மீண்டும் அரைத்து மாவாக்கவும்.

பாத்திரத்தில் தேவையான நீர் விட்டு கொதி வந்ததும் நொய் சேர்த்து கஞ்சியாக காய்ச்சவும். (நொய் வெந்து கிடைக்கும் பதம் பாயாசம் பதத்தில் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப நீர் வைக்கவும்.)

நொய்யை காய்ச்சி எடுத்து இந்த கஞ்சியுடன் அரைத்து வைத்த உதிரி மாவை சேர்த்து கெட்டி இல்லாமல் கலந்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். இந்த மாவு அப்படியே 1 நாள் புளிக்க வேண்டும்.

அடுத்த நாள் வழக்கமாக கல் தோசை ஊற்றுவது போல் இதை ஊற்றலாம். சிறுந்தீயில் மூடி போட்டு வேக விட வேண்டும். திருப்பி போட கூடாது. ஆப்பம் போல் பஞ்சு போல் வரும்.

குறிப்புகள்: