பச்சரிசிமாவு ரொட்டி
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 2 கப்
பொடிதாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
சிறு சிறு துண்டுகளாகப் பிய்த்த மிளகாய் வற்றல் - 3
தேங்காய் துருவல் - 3/4 கப்
கடுகு - 1/2 தேக்கரண்டி
பொடிதாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1/2 கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சின்ன வெங்காயம், காய்ந்தவற்றல் மிளகாய், கொத்தமல்லித்தழை இவற்றை மேலே கூறியதுப்போல் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அதில் கடுகு மற்றும் நறுக்கியவற்றைப் போட்டு நன்றாக வதக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசிமாவும், தேங்காய் துருவல் வதக்கியவற்றைப் போட்டு, உப்பும் போட்டு தண்ணீர் விட்டு பிசையவும்.
பிசைந்த மாவு கொஞ்சம் தண்ணீர் கோர்த்து இருக்கவும். அதை பெரிய உருண்டை வடிவத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து வைக்கவும்.
ஒரு வாழை இலை துண்டில் அல்லது பால் கவரிலோ எண்ணெய் தடவி ஒரு உருண்டை மாவை எடுத்து கையினாலே ரொட்டியை தட்டி பரப்பவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் பரப்பின ரொட்டியை பிரித்துப் கல்லில் போட்டு எண்ணெய் விட்டு மறுபக்கமும் திருப்பி போட்டு ரொட்டி வெந்தபின் எடுக்கவும். பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து ரொட்டியைச் சுடவும்.
குறிப்புகள்:
உருளைக்கிழங்கு குருமா குழம்பு வைத்து பரிமாறவும்.