நாலைந்து தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாவு அரைக்க:

பச்சை அரிசி - 100 மி.லி ( 1/2 கப்)

புழுங்கல் அரிசி - 100 மி.லி (1/2 கப்)

துவரை, கடலை, உளுத்தம் பருப்புகளின் கலவை 200 மி.லி (1 கப்) - மூன்று பருப்பும் சம அளவு.

ஓட்ஸ் - 200 மி.லி (1 கப்)

அவல் - 100 மி.லி (1/2 கப்)

காய்ந்த மிளகாய் - 6.

தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி.

இஞ்சி - 1 அங்குலம்.

தாளிக்க:

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1

காரட் சிறியது (பொடியாக நறுக்கியது) - 1

கடுகு - 1 தேக்கரண்டி.

சீரகம் - 1/2 தேக்கரண்டி.

கொத்தமல்லி (நறுக்கியது) - 1 தேக்கரண்டி.

புதினா (நறுக்கியது) - 1 தேக்கரண்டி.

கறிவேப்பிலை (நறுக்கியது) - 1 தேக்கரண்டி.

செய்முறை:

அரிசி, பருப்பு வகைகள், அவல் இவைகளை 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஓட்ஸ்- ஐ 10 நிமிடம் தனியாக ஊற வைக்க வேண்டும்.

ஊற வைத்த பொருட்களில், ஓட்ஸ் நீங்கலாக, மற்றவைகளுடன் மிளகாய், தேங்காய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து, மாவு பதத்தில் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவுடன் ஓட்ஸ் கலந்து ஒரு சுற்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

மாவு கலவையில் தாளிப்புப் பொருட்களைத் தாளித்துக் கொட்டி, உப்பு சேர்த்து, 4 - 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

பின்பு மெல்லிய முறுகல் தோசையாகவோ, அடையாகவோ வார்த்து சூடாக பரிமாறி மகிழ்விக்கலாம்.

குறிப்புகள்: