தோசை (1)
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 4 ஆழாக்கு (800 கிராம்)
பச்சரிசி - 1/2 ஆழாக்கு (100 கிராம்)
உளுந்து - 1/2 ஆழாக்கு (100 கிராம்)
வெந்தயம் - 1 தேக்கரண்டி
செய்முறை:
அரிசி இரண்டையும் ஒன்றாக 5 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தையும், வெந்தயத்தையும் ஒன்றாக 15 நிமிடம் ஊற வைக்கவும். இரண்டையும் தனித்தனியாக ஆட்டி உப்பு சேர்த்து ஒன்றாக கரைக்கவும்.
மறுநாள் காலையில் தண்ணீர் தேவையானால் ஊற்றி கலக்கி தோசை ஊற்றினால் சுவையான தோசை தயார்.