தோசை உப்புமா
3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 1 கப்
பால் - 2 குழிகரண்டி
சீனி - 4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் -10
கடுகு உளுந்து - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தோசை மாவை வார்க்கவும். ஆறியதும் ப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.
பின்னர் அதில் சிறிது சிறிதாய் பால் விட்டு உதிரியாய் வரும் அளவுக்கு பிசையவும்.
கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு கடுகுளுந்து தாளிக்கவும். பின்னர் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் சின்ன வெங்காயம் பொடியாய் நறுக்கியதையும் உப்பையும் சேர்த்து பொன்னிறமாக சுருளும் வரை வதக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு தாளிப்பை உதிர்த்து வைத்துள்ள தோசையோடு சேர்த்து கலக்கவும்.