தேங்காய் தோசை உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/2 கப்

பச்சரிசி - 1 கப்

புழுங்கல் அரிசி - 1 கப்

தேங்காய் - ஒரு மூடி

கடுகு - 1/4 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 5

கறிவேப்பிலை - சிறிய கொத்து

எண்ணெய் - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இரண்டு அரிசிகளையும் நன்கு ஊற வைத்து தேங்காய் மற்றும் உப்புடன் சேர்த்து மையாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.

அரைத்தபின் மிக்ஸி கழுவின நீரை கொதிக்க வைத்து ஆறியதும் மாவில் சேர்க்கவும். இதை ரவா தோசைப் போல் சுட்டுக்கொள்ளவும்.

துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சைமிளகாய் போட்டுத் தாளிக்கவும்.

பிறகு துவரம்பருப்பையும், துண்டு துண்டுகளாய் நறுக்கி வைத்துள்ள தோசைகளையும், தேவையான உப்பும் சேர்த்து கிளறிவிடவும்.

துவரம்பருப்பு தண்ணீர் நன்கு சுண்டியதும்தான் தோசை துண்டுகளைச் சேர்க்கவேண்டும். தேவையெனில் சிறிது தேங்காய்த் துருவல் கடைசியில் சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்புகள்: