துவரம்பருப்பு தோசை

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 1 கப்

பச்சரிசி - 1/2 கப்

பச்சைமிளகாய் - 2

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

கொத்தமல்லி - ஒரு பிடி

துருவிய கேரட் - 1/2 கப்

உப்புத்தூள் - தேவையான அளவு

ஆப்பச்சோடா - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பருப்பு மற்றும் அரிசியை சுத்தம் செய்து வெந்நீரைச் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

பிறகு அதில் இஞ்சி, பச்சைமிளகாய், சீரகம், கொத்தமல்லியை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு எல்லாத்தூளையும் போட்டு சோடாவையும் சேர்த்து நன்கு கலக்கி அரைமணி நேரம் வைத்திருக்கவும். பிறகு கடைசியில் கேரட் துருவலைச் சேர்த்து கலக்கி மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும்.

குறிப்புகள்: