திடீர் ஓட்ஸ் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 2 க‌ப்

அரிசி மாவு -‍ 1/2 கப்

த‌யிர்/மோர் ‍- 1 ல் இருந்து 1 1/2 க‌ப் வரை

சிக‌ப்பு வெங்காய‌ம் (சின்ன‌து) - 1

ப‌ச்சை மிள‌காய் - 3

சீர‌க‌ம் - 1 தேக்க‌ர‌ண்டி

எண்ணெய் -‍ தேவையான‌ அள‌வு

உப்பு -‍ தேவையான‌ அள‌வு

செய்முறை:

ஓட்ஸ், அரிசிமாவு இர‌ண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, இதில் த‌யிர்/மோரை ஊற்றி, ஓட்ஸ் + மாவு முழுதும் தயிரில் மூழ்கும் படியாக கலந்து ஒரு 15 - 30 நிமிடம் ஊற விடவும்.

வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கலந்து வைத்த ஓட்ஸை மிக்ஸியில் போட்டு, ஊற வைக்க பயன்படுத்திய தயிரையும் அதனுடனேயெ சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். மாவு தோசைமாவு பதத்தைவிட சற்று தண்ணியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

இப்போது இதில், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சீரத்தை போட்டு தேவையான அளவு உப்பையும் சேர்த்து, நன்கு கலக்கி, தோசைக்கல்லில் தோசையாக சுட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இட்லிப்பொடியுடனேயே சாப்பிட மிக அருமையாக இருக்கும். தக்காளி சட்னியும் நல்ல காம்பினேஷனாக இருக்கும்.