தால் ரொட்டி
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 100 கிராம்
கோதுமை மாவு - 1/4 கிலோ
துருவிய சிறிய கேரட் - 1
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1/4 தேக்கரண்டி
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/3 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குக்கரில் எண்ணெய் விட்டு பொடியாக கட் செய்த வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள், மிளகாய் பொடி, கேரட் துருவியது சேர்த்து நன்கு வதக்கி பாசிப்பருப்பு சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து நிதானமாக 2 விசில் விட்டு எடுக்கவும். நன்கு வெந்த பின்பு மசித்துக் கொள்ளவும்.
பின்பு அதனோடு உப்பு, கோதுமை மாவை சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பிசைந்து அரை மணி நேரமாவது வைக்கவும்.
அதனை தேவையான அளவிற்கு உருண்டைகளாக்கி சப்பாத்தி கட்டையில் மாவு போட்டு பரத்தி ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும். விருப்பப்பட்டால் நெய் அல்லது எண்ணெய் விட்டும் சுடலாம்.
குறிப்புகள்:
ரைத்தா உடன் சாப்பிடலாம்.