தஹி பூரி
0
தேவையான பொருட்கள்:
உப்பிய சின்ன பூரி - 6 அல்லது தேவையான அளவு
தயிர் - 2 கப்
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
உள்ளே நிரப்ப:
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தயிரை உப்பு, சர்க்கரை சேர்த்து தண்ணீர் விடாமல் கடைந்து வைக்கவும்.
உருளைக்கிழங்கை உதிர்த்து, மீதி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
தஹி பூரி செய்யும் முறை:
ஏற்கனவே செய்து வைத்துள்ள பூரிகளில் உப்பியவற்றை எடுத்து, நடுவில் துளையிட்டு, உள்ளே தேக்கரண்டி இனிப்பு சட்னி விடவும்.
உருளைக்கிழங்கு கலவையை உள்ளே நிரப்பி, கடைந்த தயிரை உள்ளே ஊற்றி, வறுத்த சீரகத்தூள், மிளகாய் தூள் தூவி, உடனே சாப்பிட வேண்டும்.