தயிர் இட்லி
தேவையான பொருட்கள்:
புளிப்பில்லாத தயிர்- 3 கப்
காய்ச்சி ஆறவைத்த பால்- 1/2 கப்
மினி இட்லிகள் -20 அலல்து 25
பச்சை மிளகாய்-2
துருவிய இஞ்சி- 1/2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 4 இலைகள்
தேங்காய்த்துருவல்- 1/4 கப்
காரட் துருவல்- 1/4 கப்
முந்திரிப்பருப்பு- 8
காயம்- 1/2 தேக்கரண்டி
கடுகு-1 தேக்கரண்டி
சீரகம்- அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தயிரை பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இஞ்சி , பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை கொரகொரப்பாக அரைத்து தயிரில் தேவையான உப்புடன் கலக்கவும்.
பிறகு இட்லிகளை அதில் சேர்த்து கலக்கவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி கடுகைப் போட்டு தாளிக்கவும்.
பிறகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காயம், சீரகம் போட்டு சற்று வதக்கி முந்திரியைப் போட்டு சிவந்ததும் தயிரில் கொட்டவும். தேங்காய்த்துருவல், காரட் துருவல் சேர்த்து கிளறவும்.