தக்காளி பூரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1/4 கிலோ

மைதா - 1/4 கிலோ

தக்காளி - 3

பொட்டுக்கடலை மாவு - 2 மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - பூரி பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மைதா, கோதுமை, உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பூரி மாவு போல் அடித்து பிசைந்து மூடி வைக்கவும்.

கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும்.

தக்காளியை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து, அதனுடன் கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், உப்பு செர்த்து பிசைந்து சிறு உருண்டையாக உருட்டி வைக்கவும் ( தளர இருந்தால், இன்னும் சிறிது பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்).

பிசைந்த மாவை சிறு உருண்டையாகளாக்கி, பூரிக்கு தேய்ப்பது போல் தேய்த்து உருட்டிய மசாலா உருண்டையை உள்ளே வைத்து மூடி, பூரியாக தேய்க்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், தேய்த்த பூரிகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்: